2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை


2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தற்கொலை
x
தினத்தந்தி 10 Sept 2018 3:15 AM IST (Updated: 10 Sept 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

கம்பத்தில், 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கம்பம், 


கம்பம் புதுப்பள்ளிவாசல் அருகே உள்ள சமையன் தெருவை சேர்ந்தவர் அழகு துரை (வயது 34). இவர், கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். அவருடைய மனைவி ஜெயமணி (28). இவர்களுடைய மகள் தேஜாஸ்ரீ (8), மகன் காசி விஸ்வநாதன் (3). அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேஜாஸ்ரீ 3-ம் வகுப்பு படித்து வந்தாள்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் அழகுதுரை, வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதை யடுத்து அழகுதுரை கதவை தட்டிப்பார்த்தார். இருப்பினும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அழகு துரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் விட் டத்தில் ஜெயமணி தூக்கில் பிணமாக தொங்கி கொண்டி ருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் குழந்தை களை தேடியபோது காண வில்லை. வீட்டின் வெளிப்புறத் தில் உள்ள தண்ணீர் தொட்டியில் தேஜாஸ்ரீயும், காசி விஸ்வநாதனும் பிணமாக மிதந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் ஜெயமணி உள்பட 3 பேரின் உடல்களை யும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், போலீஸ் காரர் அழகுதுரை குடும்பத் துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இதையடுத்து சொந்தமாக வீடு கட்ட முடிவு செய்தார். இதற்காக தனது மகன் காசி விஸ்வநாதனுக்கு காதணி விழா நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் பணத்தை கொண்டு வீடு கட்ட தீர்மானித்தார்.
இதையொட்டி ஜெய மணியிடம், சுப்பிரமணிய கோவில் தெரு பகுதியில் உனது தந்தை பெயரில் உள்ள காலி இடத்தில் வீடு கட்டலாம் என்று தெரிவித்துள்ளார். இதற்கு ஜெயமணி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதன்காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களாக இருவரும் பேசாமல் இருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் இருந்து மனமுடைந்து காணப்பட்ட ஜெயமணி, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத் துள்ளார். தான் இறந்துவிட் டால் குழந்தைகள் அனாதை யாகி விடுமே? என எண்ணிய ஜெயமணி, குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்தார்.
இதையடுத்து மனதை கல்லாக்கி கொண்டு பெற்ற குழந்தைகள் என்றும் கூட பாராமல் தண்ணீர் தொட் டியில் மூழ்கடித்து குழந்தை களை கொலை செய்தார். பின்னர் அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.இதற்கிடையே கொலை நடந்த சம்பவம் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. 

Next Story