மாவட்ட செய்திகள்

ஆம்பூர், வாணியம்பாடி தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு + "||" + Ambur, Vaniyambadi constituency Collector survey in polling stations

ஆம்பூர், வாணியம்பாடி தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு

ஆம்பூர், வாணியம்பாடி தொகுதியில் வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ஆய்வு
ஆம்பூர், வாணியம்பாடி தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி,

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், இடமாற்றம் செய்தல் குறித்த சிறப்பு முகாம் நேற்று நடந்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இந்த முகாம்களில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து கலெக்டர் ராமன் ஆய்வு மேற்கொண்டார்.


வேலூர் கொணவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது வேலூர் உதவி கலெக்டர் மேகராஜ், மாநகராட்சி கமிஷனர் விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

வாணியம்பாடி நியூடவுனில் உள்ள நகராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு செய்து, வாக்காளர்களிடமும், பொதுமக்களிடமும் குறைகளை கேட்டறிந்தார். கலெக்டருடன் தாசில்தார் கிருஷ்ணவேணி, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், நகராட்சி பொறியாளர் கோபு, மேலாளர் அப்துல்அஜீஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.

இதேபோல் ஆலங்காயம் ஒன்றிய பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மைய பணிகளையும் கலெக்டர் பார்வையிட்டார். அப்போது ஒன்றிய ஆணையாளர்கள் வின்சென்ட் ரமேஷ்பாபு, வசந்தி மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர். இதேபோல் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இந்த சிறப்பு முகாம் நடந்தது. இதில் இளைஞர்கள் பெயர் சேர்க்க விண்ணப்பித்தனர்.

ஆம்பூர் அருகே மாராப்பட்டில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அங்கிருந்த படிவங்களை வாங்கி பார்வையிட்டார். ஆய்வின் போது ஆம்பூர் தாசில்தார் சுஜாதா மற்றும் வருவாய்த்துறையினர் உடன் இருந்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மோதிய கார் கவிழ்ந்து 2 பேர் பலி
ஆம்பூர் அருகே கன்டெய்னர் லாரி மீது மோதிய கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார்.
2. 5 வயது சிறுவன் அடித்துக் கொலை - கோவில் வளாகத்தில் பிணம் வீச்சு
ஆம்பூர் அருகே 5 வயது சிறுவனை அடித்துக் கொலை செய்து கோவில் அருகே பிணத்தை வீசி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
3. சென்னை கேளம்பாக்கம் அருகே ரவுடியை வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் ஆம்பூர் கோர்ட்டில் சரண்
சென்னை கேளம்பாக்கம் அருகே ரவுடியை ஓட, ஓட விரட்டி வெட்டி கொலை செய்த வழக்கில் 3 பேர் ஆம்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
4. ஆம்பூர் அருகே மலைப்பாதையில் டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் பலி
ஆம்பூர் அருகே மலைப்பாதையில் டிராக்டர் கவிழ்ந்து 3 பேர் பலியானார்கள். மலைக்கிராமங்களுக்கு பஸ்வசதி இல்லாததால் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
5. திருப்பதி கோவிலுக்கு சென்றபோது விபத்து: வேன் கவிழ்ந்து 22 பேர் படுகாயம்
வேடசந்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் திருப்பதி கோவிலுக்கு சென்றபோது வேன் கவிழ்ந்து 22 பேர் படுகாயம் அடைந்தனர்.