மாவட்ட செய்திகள்

2,979 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் + "||" + Special camp to name the voter list in 2,979 centers

2,979 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

2,979 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
நெல்லை மாவட்டத்தில் 2,979 மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
நெல்லை, 


இந்திய தேர்தல் ஆணையம் தமிழகம் முழுவதும் கடந்த 1-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. நெல்லை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை கலெக்டர் ஷில்பா வெளியிட்டார். நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், ராதாபுரம், நாங்குநேரி என 10 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது.

1-1-2019-ஐ தகுதிநாளாக கொண்டு 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க படிவம் 6, நீக்கம் செய்ய படிவம் 7, இதர திருத்தங்களுக்கு படிவம் 8, சட்டசபை தொகுதிக்குள் பெயர் மாற்றம் செய்ய 8ஏ, வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் பெயர் சேர்க்க 6ஏ ஆகியவற்றில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் நேற்று நடந்தது. நெல்லை மாவட்டத்தில் இந்த முகாம் 2 ஆயிரத்து 979 வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடந்தது. ஒரு சில வாக்குச்சாவடியில் கூட்டம் அதிகமாக இருந்தது. சில வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பாளையங்கோட்டை தொகுதி வாக்குச்சாவடி மையங்களை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பார்வையிட்டார். நெல்லை சட்டசபை தொகுதி வாக்குச்சாவடிகளை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் பார்வையிட்டார். நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள வாக்குச்சாவடியை நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா பார்வையிட்டார். இதேபோல் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் அந்தந்த பகுதியில் வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டனர்.

வருகிற 23-ந் தேதி, அடுத்த மாதம் (அக்டோபர்) 7, 14 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. 


தொடர்புடைய செய்திகள்

1. வாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும்
ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியலில் இருந்து 10 ஆண்டுக்கு முன் இறந்தவர்களின் பெயர்களையும் நீக்க வேண்டும் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. பேட்டி அளித்துள்ளார்.
2. தமிழகம் முழுவதும் இறுதிகட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குவதற்கான சிறப்பு முகாம் இறுதி கட்டமாக நேற்று நடந்தது. சென்னையில் 3 ஆயிரத்து 754 மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.
3. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அடுத்த மாதம் 20-ந்தேதி வரை அவகாசம் தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நேற்று முன்தினம் முதல் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
4. தமிழகம் முழுவதும் 3-ம் கட்டமாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க சிறப்பு முகாம்
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குவதற்கான சிறப்பு முகாம் 3-ம் கட்டமாக நேற்று நடந்தது. சென்னையில் 3 ஆயிரத்து 754 மையங்களில் சிறப்பு முகாம் நடந்தது.
5. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடந்த வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார்.