காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்


காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி மருந்தாளுனர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 11 Sept 2018 4:00 AM IST (Updated: 10 Sept 2018 10:42 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை பெரிய ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை,

தமிழகம் முழுவதும் காலியாக இருக்கும் மருந்தாளுனர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மருந்து கிடங்குகளில் தலைமை மருந்தாளுனர் பணியிடங்களை உருவாக்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தக கண்காணிப்பாளர் பணியிடம் உருவாக்க வேண்டும். தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் கீழ் இயங்கும் மருந்து கிடங்குகளில் மருந்து கிடங்கு அலுவலர்களை நியமிக்க வேண்டும். நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுனர்களை பணிவரன்முறை செய்ய வேண்டும். காசநோய் பிரிவில் பணியாற்றும் மருந்தாளுனர்களுக்கு சிறப்பு விடுப்பு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுனர்கள் சங்கத்தின் சார்பில் மதுரை பெரிய ஆஸ்பத்திரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்து கண்டன உரை நிகழ்த்தினர். இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினர்.

 இதுகுறித்து மாவட்ட தலைவர் ரத்தினசாமி கூறுகையில், தமிழகம் முழுவதும் ஏராளமான காலிப்பணியிடங்கள் இருக்கின்றன. இதனை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடக்கிறது. பொதுமக்கள், நோயாளிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில் நாங்கள் போராடி வருகிறோம். எங்களின் நியாயமான கோரிக்கையை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றார்.


Next Story