மணலி சாலையில் விபத்தை தடுக்க கன்டெய்னர் லாரி டிரைவர்களுக்கு விழிப்புணர்வு முகாம்
கன்டெய்னர் லாரி டிரைவர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் பங்கேற்கும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர், எண்ணூர் துறைமுகங்களில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் சரக்குகளை தினமும் ஆயிரக்கணக்கான கன்டெய்னர் லாரிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு வருகின்றது. அவ்வாறு சரக்குகளை ஏற்றி செல்லும் கன்டெய்னர் லாரிகளை எண்ணூர் விரைவு சாலை, மணலி விரைவு சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிறுத்திவிட்டு டிரைவர்கள் சென்று விடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்களால் உயிர் சேதம் ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்க கன்டெய்னர் லாரி டிரைவர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் பங்கேற்கும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருவொற்றியூர் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் அமல்தாஸ், காசிமேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் பானுமதி ஆகியோர் தலைமையில் நடந்தது.
அப்போது போலீசார் டிரைவர்களுக்கு போக்குவரத்து விதியை மீறக்கூடாது, மீறினால் காவல்துறை சார்பில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சாலை விதிகளை பின்பற்றி விபத்து ஏற்படாமல் வாகனங்களை இயக்குவது எப்படி? என்பது குறித்து விளக்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து ஆய்வாளர்கள் கண்ணன், ஜெயச்சந்திரன் மற்றும் கன்டெய்னர் லாரி டிரைவர்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story