குற்றச்செயலில் மீண்டும் ஈடுபட்ட வாலிபருக்கு 338 நாட்கள் சிறை


குற்றச்செயலில் மீண்டும் ஈடுபட்ட வாலிபருக்கு 338 நாட்கள் சிறை
x
தினத்தந்தி 10 Sep 2018 10:15 PM GMT (Updated: 10 Sep 2018 6:59 PM GMT)

பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டு அதை மீறி குற்றச்செயலில் மீண்டும் ஈடுபட்ட வாலிபருக்கு 338 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 32). இவர் மீது காசிமேடு மீன்பிடி துறைமுகம், காசிமேடு போலீஸ் நிலையங்களில் கொள்ளை, வழிப்பறி, திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் கடந்த மாதம் காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் முன்னிலையில் வண்ணாரப்பேட்டை துணை கமி‌ஷனர் ரவாளி பிரியாவிடம் இனிமேல் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில் 2–ந்தேதி காசிமேடு பகுதியை சேர்ந்த மீன் வியாபாரி வெண்மதி (42) மீது மயக்க பொடி தூவி அவரிடமிருந்து 10 பவுன் தங்க சங்கிலி, ரூ.50 ஆயிரம், 2 பவுன் மோதிரம், காலில் அணிந்திருந்த வெள்ளி கொலுசு, இரு சக்கர வாகனம் ஆகியவற்றை திருடிய வழக்கில் ஜெயசீலனை காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசார் கைது செய்தனர்.

பிரமாண பத்திரம் தாக்கல் செய்துவிட்டு அதை மீறி குற்றச்செயலில் மீண்டும் ஈடுபட்ட ஜெயசீலனுக்கு 338 நாட்கள் சிறை தண்டனை விதித்து துணை கமி‌ஷனர் ரவாளி பிரியா உத்தரவிட்டார். இதையடுத்து புழல் சிறையில் ஜெயசீலன் அடைக்கப்பட்டார்.

Next Story