நித்யானந்தா சாமியாரை கைது செய்ய தடை கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


நித்யானந்தா சாமியாரை கைது செய்ய தடை கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 11 Sept 2018 4:28 AM IST (Updated: 11 Sept 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

நித்யானந்தா சாமியாரை கைது செய்ய தடை விதித்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு,

ராமநகர் மாவட்டம் பிடதியில் நித்யானந்தா சாமியார் ஆசிரமம் உள்ளது. இந்த நிலையில் நித்யானந்தா சாமியார் மீது கற்பழிப்பு புகார் எழுந்தது. இதையடுத்து ராமநகர் மாவட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ராமநகர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, நித்யானந்தா சாமியார் ஆஜராகவில்லை. இதையடுத்து அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து ராமநகர் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் தனக்கு எதிரான பிடிவாரண்டு உத்தரவை ரத்து செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் நித்யானந்தா சாமியார் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி உத்தரவு

அந்த மனு நேற்று ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணையின்போது, நித்யானந்தா சாமியாரை கைது செய்ய வேண்டாம் என்று வாய்மொழியாக அரசு வக்கீலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். இந்த மனு மீதான விசாரணை வருகிற 17-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Next Story