பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழுஅடைப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 435 பேர் கைது


பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழுஅடைப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 435 பேர் கைது
x
தினத்தந்தி 11 Sept 2018 8:30 AM IST (Updated: 11 Sept 2018 8:12 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நேற்று முழு அடைப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வேலூர் மாவட்டத்தில் பஸ், ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடின. போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 435 பேர் கைது செய்யப்பட்டனர்.

வேலூர், 

பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த முழு அடைப்பு போராட் டத்திற்கு தமிழ்நாட்டில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்பட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித் திருந்தன.

இதனால் முழு அடைப்பு போராட்டத்திற்கு பெருமள வில் ஆதரவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பஸ், ஆட்டோக்கள் ஓடாது என் றும், கடைகள் அடைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தபடி நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டம் எந்தவகையிலும் பொதுமக்களை பாதிக்க வில்லை.

வேலூரில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டிருந்தது. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம்போல ஓடின. தனி யார் பள்ளி, கல்லூரி பஸ்களும் ஓடியது. இதனால் வேலூர் நகரம் நேற்று எப்போதும் போலவே பரபரப்பாக காணப் பட்டது. காய்கறி மார்க்கெட் டும் வழக்கம்போல இயங்கின. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படவில்லை.

கர்நாடகா மாநிலத்தில் இருந்து வேலூருக்கு இயக்கப் படும் அனைத்து பஸ்களும் நேற்று வேலூருக்கு வர வில்லை. அதேபோன்று வேலூரில் இருந்து பெங்களூரு, கே.ஜி.எப். பகுதிக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் ஓசூர் வரை மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் பெங்களூரு சென்ற பயணிகள், ரெயில்கள் மூலம் சென்றனர்.

வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம், திருப் பத்தூர், ஆம்பூர், குடியாத்தம், ஆற்காடு, ராணிப்பேட்டை உள்பட அனைத்து பகுதி களிலும் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல இயங்கின. பஸ்களும் ஓடியது.

பெட்ரோல். டீசல் விலை உயர்வை கண்டித்து நடை பெற்ற முழு அடைப்பை யொட்டி பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. வேலூரில் அண்ணா சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்பட பல்வேறு கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்திற்கு அனுமதி யில்லாததால் அவர்களை துணைபோலீஸ் சூப்பிரண்டு அலெக்ஸ், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், நந்தகுமார், லோகநாதன் ஆகியோர் தடுத்து நிறுத்தினர்.

இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் தலைமை தபால் அலுவலகம் அருகே உள்ள எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு நின்று மத்தியஅரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதைத் தொடர்ந்து இதில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி.நந்தகுமார், கார்த்தி கேயன், முன்னாள் எம்.பி. முகம்மதுசகி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் டீக்கா ராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநிலஅமைப்பு செயலாளர் நீல.சந்திரகுமார் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதேபோன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர். இதேபோன்று மாவட்டம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதாக 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 435 பேர் கைது செய்யப்பட்டனர்.

Next Story