மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகேபோலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு வலைவீச்சு + "||" + Police house jewelry, money theft

திருவள்ளூர் அருகேபோலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு வலைவீச்சு

திருவள்ளூர் அருகேபோலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருட்டுமர்ம நபர்களுக்கு வலைவீச்சு
திருவள்ளூர் அருகே போலீஸ் ஏட்டு வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது. திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த திருவூர் மாணக்நகரை சேர்ந்தவர் ரவீந்திரன் (வயது 37). இவர் குற்றவாளிகள் கண்காணிப்பு பிரிவில் போலீஸ் ஏட்டாக உள்ளார். இவரது மனைவி மோகனவள்ளி (27). இவர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். இரவு அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

நகை, பணம் திருட்டு

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக் கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகையும், ரூ.1 லட்சத்து 50 ஆயிரமும் திருட்டு போனது தெரியவந்தது.

இதுகுறித்து ரவீந்திரன் செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.