தூத்துக்குடியில் சைக்கிள்–மோட்டார் சைக்கிள் மோதல்; மீனவர் பலி 2 பேர் படுகாயம்
தூத்துக்குடியில் சைக்கிள்–மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீனவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் சைக்கிள்–மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மீனவர் பலியானார். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:–
மோட்டார் சைக்கிள் மோதல்
தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் அந்தோணிபிச்சை (வயது 55) மீனவர். இவர் நேற்று முன்தினம் இரவு தனது சைக்கிளில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக செயின்ட் மேரீஸ் காலனி மெயின் ரோடு பகுதியில் பால்பண்ணை எதிரே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக அந்தோணிபிச்சை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு, பலத்த காயம் அடைந்தார். மேலும் மோட்டார் சைக்கிளில் வந்த தாய்நகரைச் சேர்ந்த வென்சுலின் (19), சாமுவேல்புரத்தை சேர்ந்த ஜேசு (19) ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
சாவு
இதை பார்த்த அப்பகுதி மக்கள் 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்தோணிபிச்சை பரிதாபமாக உயிர் இழந்தார். வென்சுலன், ஜேசு ஆகியோருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சந்திரமூர்த்தி வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story