மாவட்ட செய்திகள்

தாராவி தி.மு.க. செயலாளர்உத்தமனின் 25-வது ஆண்டு திருமண விழாகவர்னர், முதல்-மந்திரி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து + "||" + Dharavi DMK Secretary Uthman's 25th Anniversary Wedding Festival

தாராவி தி.மு.க. செயலாளர்உத்தமனின் 25-வது ஆண்டு திருமண விழாகவர்னர், முதல்-மந்திரி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தாராவி தி.மு.க. செயலாளர்உத்தமனின் 25-வது ஆண்டு திருமண விழாகவர்னர், முதல்-மந்திரி, மு.க.ஸ்டாலின் வாழ்த்து
தாராவி தி.மு.க. செயலாளர் உத்தமன்- கோகிலா தம்பதியின் 25-ம் ஆண்டு திருமண நாளையொட்டி கவர்னர், முதல்-மந்திரி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
மும்பை, 

தாராவி தி.மு.க. செயலாளர் உத்தமன்- கோகிலா தம்பதியின் 25-ம் ஆண்டு திருமண நாளையொட்டி கவர்னர், முதல்-மந்திரி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

திருமண நாள்

மும்பை தாராவி தி.மு.க. செயலாளர் வே.ம.உத்தமன்- கோகிலா தம்பதி இன்று(புதன்கிழமை) 25-வது ஆண்டு திருமண நாளை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி அவர்களுக்கு மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில், கழகத்தின் மூத்த நிர்வாகிகளை மதித்தும், கிளைக்கழக நிர்வாகிகளை அரவணைத்தும் தனது இளமை பருவம் முதல் தீவிர கழக பணியாற்றி வரும் தாராவி கிளை கழக செயலாளர் வே.ம.உத்தமன்- கோகிலா ஆகிய இணையரின் 25-வது ஆண்டு திருமண விழாவில் எல்லா வளமும் பெற்று வாழ நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன், என கூறி உள்ளார்.

மந்திரிகள் வாழ்த்து

இதேபோல தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், மராட்டிய மந்திரிகள் வினோத் தாவ்டே, பங்கஜா முண்டே, ஏக்நாத் ஷிண்டே, ரவீந்திர வாய்க்கர், ரஞ்சித் பாட்டீல், மும்பை மேயர் விஸ்வநாத் மகாதேஷ்வர், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே.

மராட்டிய முன்னாள் முதல்-மந்திரிகள் மனோகர் ஜோஷி, அசோக் சவான், பிரிதிவிராஜ் சவான், முன்னாள் மந்திரி நசீம்கான் உள்பட பலர் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளனர்.