அரியலூரில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேரை விடுதலை செய்யக்கோரி அரியலூர் நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு வக்கீல் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்,
ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அமைச்சரவை, கவர்னருக்கு பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரை மீது கவர்னர் உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும். காலம் தாழ்த்த கூடாது. இதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story