மாவட்ட செய்திகள்

போடி பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் + "||" + Collector studying the development activities in Bodi area

போடி பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

போடி பகுதியில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
போடி பகுதியில் நடக்கிற பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.
போடி,

போடி தாலுகாவுக்கு உட்பட்ட போ.மீனாட்சிபுரம், சில்லமரத்துப்பட்டி, ராசிங்காபுரம், புதுக்குளம் ஆகிய பகுதிகளில் பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சி பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகளை கலெக்டர் பல்லவி பல்தேவ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி போ.மீனாட்சிபுரம் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் சொட்டு நீர் பாசனத்திட்டத்தின் கீழ் எண்ணெய் பனையில் ஊடுபயிராக பயிரிட்டுள்ள பருத்தி, கொத்தமல்லி சாகுபடி நிலத்தை கலெக்டர் பார்வையிட்டார்.

தமிழ்நாடு ஊரக உட்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் தேவாரம் முதல் பெருமாள்கவுண்டன்பட்டி வரை ரூ.67 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.1¼ லட்சம் மதிப்பில் கட்டப்படுகிற தடுப்பணை பணி ஆகியவற்றை பார்வையிட்டார்.

ராசிங்காபுரம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்தெடுக்கும் பணி, அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள், பொது கழிப்பறை, புது வாழ்வுத்திட்டத்தின் கீழ் விடிவெள்ளி திறமை கற்றல் மையத்தின் செயல்பாடுகள் ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார்.

போடியில், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தின் கீழ் புதுக்குளம் கண்மாய் செல்லும் பாதையில் தார்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியையும் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குனர் திலகவதி, செயற்பொறியாளர் கவிதா, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) மஞ்சாளறு வடி நிலக்கோட்ட செயற்பொறியாளர் சென்றாயப்பெருமாள், மகளிர் திட்ட அலுவலர் கல்யாணசுந்தரம், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கிஷோர் குமார், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) அபிதாஹனீப், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாரதமணி, சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். 


தொடர்புடைய செய்திகள்

1. தேனி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு ‘தினத்தந்தி கல்விநிதி’ - கலெக்டர் பல்லவி பல்தேவ் நாளை வழங்குகிறார்
தேனி மாவட்டத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் எஸ்.எஸ்.எல்.சி. மாணவ-மாணவிகள் 10 பேருக்கு ‘தினத்தந்தி’ கல்விநிதி’ வழங்கும் விழா நாளை தேனி சில்வார்பட்டியில் நடக்கிறது. விழாவில் தேனி கலெக்டர் பல்லவி பல்தேவ் கல்வி நிதியை வழங்குகிறார்.
2. இளம்வயது திருமணத்தை தடுக்க பயிற்சி - கலெக்டர் தலைமையில் நடந்தது
குழந்தை தொழிலாளர் மற்றும் இளம்வயது திருமணம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு கலெக்டர் தலைமையில் நடந்தது.
3. விபத்தில்லா தீபாவளி கொண்டாட பட்டாசு விற்க, வெடிக்க கட்டுப்பாடுகள் - கலெக்டர் தகவல்
விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவதற்காக பட்டாசு விற்பனை செய்யவும், வெடிப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
4. செங்கல் சூளை நடத்த அனுமதி பெற விண்ணப்பம் கலெக்டர் தகவல்
செங்கல் சூளை நடத்த அனுமதி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
5. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு புதுப்பிக்க தவறியவர்களுக்கு வாய்ப்பு: கலெக்டர் தகவல்
வேலைவாய்ப்பு அலுவலகத்தில், பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் பல்லவி பல்தேவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேனி மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-