மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்


மயிலாடுதுறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Sept 2018 3:30 AM IST (Updated: 12 Sept 2018 2:52 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மகளிர் அணி மாவட்ட தலைவி ராணி ராஜேந்திரன் தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி மணிசங்கர் அய்யர், கட்சியின் நாகை வடக்கு மாவட்ட தலைவர் ராஜகுமார், மகளிர் அணி மாநில செயலாளர் கிரிஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சுதா குமார் வரவேற்றார்.

பெட்ரோல்- டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு உலகலாவிய பிரச்சினைகள் தான் காரணம் என்று பொறுப்பற்ற முறையில் கூறும் பெட்ரோலிய துறை மந்திரியை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் வட்டார தலைவர் கனிமொழி, நகர தலைவர் ராஜேஸ்வரி, சீர்காழி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் சித்ரா செல்வி, பூம்புகார் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story