மானூர் அருகே பரபரப்பு மணப்பெண் திடீர் மாயம் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றது


மானூர் அருகே பரபரப்பு மணப்பெண் திடீர் மாயம் இன்று நடக்க இருந்த திருமணம் நின்றது
x
தினத்தந்தி 12 Sept 2018 4:00 AM IST (Updated: 12 Sept 2018 3:54 AM IST)
t-max-icont-min-icon

மானூர் அருகே மணப்பெண் திடீரென மாயமானதால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்று போனது. மாயமான அந்த பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.

மானூர், 

மானூர் அருகே மணப்பெண் திடீரென மாயமானதால் இன்று நடக்க இருந்த திருமணம் நின்று போனது. மாயமான அந்த பெண்ணை போலீசார் தேடிவருகின்றனர்.

திருமண ஏற்பாடு

மானூர் அருகே உள்ள காந்தீஸ்வரம்புதூரை சேர்ந்த விவசாயி ஒருவரின் மகள், கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கும், முறைமாப்பிள்ளையான சேதுராயன்புதூரை சேர்ந்த வாலிபருக்கும் பெற்றோர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இவர்களுக்கு நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு, இன்று(புதன்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.

மணப்பெண் திடீர் மாயம்

திருமணத்திற்கான ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் தீவிரமாக செய்து வந்தனர். இரு வீடுகளிலும் திருமணம் களை கட்டியிருந்த நிலையில், கடந்த 9-ந் தேதி மணப்பெண் வீட்டிலிருந்து திடீரென வெளியே சென்றார்.

பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. அவரை இரு குடும்பத்தினரும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் இன்று(புதன்கிழமை) நடக்க இருந்த திருமணம் நின்று போனது.

இதை தொடர்ந்து நேற்று மணப்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீன்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அவரை யாரும் கடத்தி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் மானூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story