இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிப்பு


இமானுவேல் சேகரன் நினைவு தினம் கடைபிடிப்பு
x
தினத்தந்தி 11 Sep 2018 11:04 PM GMT (Updated: 11 Sep 2018 11:04 PM GMT)

தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது.

அலங்காநல்லூர்,


தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. மாவட்டத்தின் பல இடங்களில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாலமேட்டில் அவரது படத்திற்கு கிழக்கு தெரு தேவந்திரகுல வேளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் நடந்தது. இதில் உறவின் முறை சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கள்ளந்திரியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் இமானுவேல் சேகரன் உருவப்படத்தை அலங்கரித்து வைத்து கிழக்கு தொகுதி செயலாளர் கார்வண்ணன் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். செய்தித்தொடர்பாளர் நல்லதம்பி, ஊடகமையம் குமார் வளவன், கிழக்கு ஒன்றிய பொருளாளர் மார்கண்டன், தீபன் சக்கரவர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். பஞ்சந்தாங்கிபட்டி, லட்சுமி புரம், காதகிணறு, ஆ.வள்ளாலபட்டி உள்பட பல இடங்களில் நினைவுதினம் கடைபிடிக்கப்பட்டது.

சாப்டூர் வடகரைபட்டியில் இம்மானுவேல் சேகரன் அறக்கட்டளை சார்பில் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பால்குட ஊர்வலம், அன்னதான நிகழ்ச்சி நடந்தது. நிர்வாகிகள் ராஜேந்திரன், வெங்கடேஸ்வரன், நாகராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்டாரபட்டி, பேரையூர் முக்குசாலை ஆகிய பகுதிகளில் இம்மானுவேல் சேகரன் உருவ படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், ஒன்றிய செயலாளர், நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். எம்.சுப்புலா புரத்தில் இம்மானுவேல் சேகரன் உருவபடத்திற்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. முன்னதாக பால்குடம் எடுத்து வரப்பட்டது. அன்னதானம்மும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிகளில் புதிய தமிழகம் கட்சி மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ஆண்டிசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். பி.சொக்கம்பட்டியில் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது இதில் மக்கள் விடுதலை கட்சி ஒன்றிய செயலாளர் அழகர்சாமி கலந்து கொண்டார்.

ஆண்டிபட்டியில் மூவேந்தர் புலிப்படை சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. வடக்கு மாவட்ட தொழிற் சங்க செயலாளர் மாரிக்கண்ணன் தலைமை தாங்கினார். வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் வசந்தகுமார், கிளைத்தலைவர் அருண் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிளைசெயலாளர் தங்கபாண்டி வரவேற்றார். இதில் சிலேப்ராமன், மாரிபாண்டி, குபேர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பாலு நன்றிகூறினார். 

Next Story