வானவில் : வீட்டின் மூலை முடுக்குகளில் ஒலிக்கும் அழைப்பு மணி
ஹாலில் ஒலிக்கும் காலிங்பெல் சத்தம், பெரிய வீட்டில் இருக்கும் எல்லா அறைகளுக்கும் கேட்காது. ஆனால் இந்த ‘மேஜிக் ப்ளை டோர்பெல்’ அந்த பிரச்சினையை தீர்க்கும்.
டிரான்ஸ்மிட்டர் மற்றும் ரிசீவர்கள் கொண்டு இயங்கும் இந்த அழைப்பு மணியை வீட்டில் பொருத்துவது சுலபம். புஷ் பட்டனுடன் கொடுக்கப்பட்டுள்ள டிரான்ஸ்மிட்டரை வாசலில் இருக்கும் பிளக்கில் (plug) பொருத்திவிட வேண்டும். இதனுடன் கொடுக்கப்பட்டுள்ள இரண்டு ரிசீவர்களை ஏதேனும் இரண்டு இடங்களில் பொருத்திக்கொள்ளலாம்.
முற்றிலும் வயர்லெஸ் முறையில் செயல்படும் இந்த டோர்பெல்லுக்கு பேட்டரி தேவையில்லை. சுவிட்ச் பிளக்கில் சொருகிவிட்டால் போதுமானது. இதனுள் பொருத்தப்பட்டிருக்கும் ஹை குவாலிட்டி ஸ்பீக்கர் 300 மீட்டர் வரை துல்லியமாக ஒலிக்கும். இந்த அழைப்பு மணி கருவியில் 52 வகையான இன்னிசை ஒலிகள் சேமிக்கப்பட்டுள்ளது. அதனால் நமக்கு வேண்டிய பாடல் ஓசையை தேர்வு செய்து, அதை அழைப்பு மணி ஓசையாக மாற்றி கொள்ளலாம். வரவேற்பு அறைக்கும், பெரிய வீட்டின் உள் அறைகளுக்கு ஏற்ப தனித்தனி அழைப்பு மணி ஓசைகளை வைத்துக்கொள்ள முடியும். நான்கு வகையான ஆடியோ அளவுகளில் இருந்து சத்தத்தை கூட்டியோ குறைத்தோ உபயோகிக்கலாம். அப்புறமென்ன இனிமே உங்க செல்போன்ல மட்டுமில்ல காலிங் பெல்லிலும் தினமும் ஒரு ரிங் டோனை வச்சு அசத்துங்க.

Related Tags :
Next Story