வானவில் : 25 மணி நேரம் இயங்கும் லெனோவா லேப்டாப்
லேப்டாப் உள்ளிட்ட கம்ப்யூட்டர் சார்ந்த மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள லெனோவா நிறுவனம் தொடர்ந்து 25 மணி நேரம் செயல்படக் கூடிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.
ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற சர்வதேச மின்னணு கண்காட்சியில் இந்த லேப்டாப் அறிமுகமானது. ‘யோகா சி-630 டபிள்யூ’ (yoga C630 WOS) என்ற பெயரில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெல்லிய தோற்றத்துடனும் (12.5 மி.மீ. தடிமன்), எடை குறைவானதாகவும் (ஒரு கிலோ 200 கிராம் எடை) கொண்டதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் திரை 13.3 அங்குலம் கொண்டதாகும். இதை தொடுதிரை லேப்டாப்பாக வடிவமைத்துள்ளனர். இதில் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் ஸ்னாப்டிராகன் 850 உள்ளது. லேப்டாப்பில் இத்தகைய வசதி சேர்க்கப்பட்டுள்ள முதலாவது லேப்டாப் இதுவே. இதில் ஒருங்கிணைந்த ஸ்னாப்டிராகன் எக்ஸ்20 எல்.டி.இ. மோடம் உள்ளது. இதன் வேகம் வினாடிக்கு 1.2 கிகாபைட். இந்த லேப்டாப் தற்போது சந்தையில் மிகவும் விரும்பப்படும் ‘போகோ எப் 1’ மற்றும் ‘ஒன் பிளஸ் 6’ ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வடிவமாக உள்ளது.
வழக்கமாக லேப்டாப்களை ஒரு குறிப்பிட்ட அளவு வரைதான் விரித்து பயன்படுத்த முடியும். இதன் தொடு திரையை மட்டும் மடக்கி அதாவது கீ போர்ட் பின் பகுதியில் இருக்கும்படி ஒரு புத்தகத்தைப் போல இதை மடக்கி பயன்படுத்தலாம்.
இதில் விண்டோஸ் 10 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் முந்தைய ஸ்னாப்டிராகன் சாதனங்களைக் காட்டிலும் இதன் வேகம் 30 சதவீதம் அதிகமாக இருக்கும்.
ஐரோப்பிய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மாடல் லேப்டாப்பை விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த உள்ளனர். ஐரோப்பிய சந்தையில் இதன் விலை 999 யூரோ. இந்தியாவில் இதன் விலை ரூ. 80 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Tags :
Next Story