வானவில் : சோலார் பவர் பேங்க்


வானவில் : சோலார் பவர் பேங்க்
x
தினத்தந்தி 12 Sept 2018 11:11 AM IST (Updated: 12 Sept 2018 11:11 AM IST)
t-max-icont-min-icon

ஸ்மார்ட்போனுக்கு மிகவும் அவசியமாக இருப்பது ‘பவர் பேங்க்’. அதிலும் நீண்ட பயணத்தின் போது அல்லது மின்சாரம் இல்லாத இடங்களுக்கு பயணிக்கும் போது கைகொடுப்பது ‘பவர் பேங்க்’ தான்.

 மின்சாரத்தில் இயங்கும் பவர் பேங்குகள் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளன.

இப்போது சூரிய ஆற்றலில் மின் உற்பத்தி செய்யும் பல பவர் பேங்க்குகள் சந்தைக்கு வந்துள்ளன. இதை வாங்கி உபயோகப்படுத்தினால், மின்சாரத்தில் சார்ஜ் போடவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் பவர் பேங்கில் இருக்கும் சூரிய மின் தகடுகள், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரித்து, பவர் பேங்கையும், செல்போனையும் சார்ஜுடன் வைத்திருக்கும்.

அதில் குறிப்பாக ‘புரோபீட்ஸ் ரிலையபிள் பவர் பேங்க்’ என்ற மின்சக்தி பவர் பேங்க், 2000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் வந்துள்ளது. இதை சூரிய ஆற்றல் மூலம் சார்ஜ் செய்ய முடியும். இதற்காக சூரிய ஆற்றலை உறிஞ்சும் பேனல் உள்ளது.

ஆரம்பத்தில் ரூ. 3,999 விலையில் இருந்த இந்த பவர் பேங்க் இப்போது அமேசான் இணையதளத்தில் 63 சதவீத தள்ளுபடி விலையில் ரூ. 1,497-க்கு கிடைக்கிறது. இது எடை (200 கிராம்) குறைவானது. எடுத்துச் செல்வதும் எளிது. அனைத்து வகையான மொபைல் போன், ஸ்மார்ட்போன், டிஜிட்டல் கேமரா, விளையாட்டு சாதனமான பி.எஸ்.பி., எம்.பி. 3 பிளேயர் உள்ளிட்ட அனைத்திற்கும் இதன் மூலம் உயிர் (சார்ஜ்) கொடுக்கலாம். 

Next Story