வானவில் : அமேசான் ‘கிண்டில்’


வானவில் :   அமேசான் ‘கிண்டில்’
x
தினத்தந்தி 12 Sept 2018 12:10 PM IST (Updated: 12 Sept 2018 12:10 PM IST)
t-max-icont-min-icon

இது மின்னணு உலகம். அறிவியல் வளர்ச்சியின் புதிய வரவுதான் இ- புத்தகம் எனப்படும் மின்னணு புத்தகங்கள்.

இப்போது கருப்பு வெள்ளை காகிதங்களில் அச்சாகும் புத்தகங்கள் கூட மின்னணு பதிப்பில் வெளி வரத் தொடங்கியுள்ளன.

புத்தகங்களை சுமந்து செல்வதை விட கிண்டில் எனப்படும் மின்னணு புத்தகங்களை எடுத்துச் செல்வது எளிது. பயணத்தின்போது மற்றவர்களுக்கு தொந்தரவு தராத வகையில் கிண்டில் புத்தகத்தில் படிக்க முடியும். மென்மையான ஒளியில் எழுத்துகள் பளிச்சிடும். தொடு திரை வசதி இருப்பதால் பக்கங்களை புரட்டுவதைப் போல புத்தகப் பக்கங்களையும் புரட்டி படிக்கலாம். இது வை-பை மூலம் செயல்படக் கூடியது. இதில் டிக்‌ஷ்னரி (அகராதி) இருப்பதால் பொருள் புரியாத வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிந்து கொள்ளலாம்.

இது 6 அங்குலம் திரை கொண்டது என்பதால் கையில் எடுத்துச் செல்வதும் எளிது. விலை ரூ. 5,999. அமேசான் இணையதளத்தில் வாங்கலாம். இது பல மாடல்களில் விற்பனையாகிறது. அமேசான் கிண்டில் இ-ரீடர் மாடலின் விலை ரூ. 6,998. கிண்டில் ஒயாசிஸ் விலை ரூ. 21,999. கிண்டில் ஒயாசிஸ் வை-பை மூன்றாம் தலைமுறை மாடலின் விலை ரூ. 28,999. விலை அதிகரிக்க அதிகரிக்க, அதில் சிறப்பம்சங்களும் கூடுதலாக இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமோ. 

Next Story