வானவில் : மின்சார டூத் பிரஷ்


வானவில் :  மின்சார டூத் பிரஷ்
x
தினத்தந்தி 12 Sept 2018 12:36 PM IST (Updated: 12 Sept 2018 12:36 PM IST)
t-max-icont-min-icon

எலக்ட்ரிக் ஷேவர் உள்ளிட்ட சிகை அலங்காரப் பொருட்கள் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வந்துள்ளன.

அந்த வரிசையில் பிலிப்ஸ் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் பல் துலக்கியை (டூத் பிரஷ்) அறிமுகம் செய்துள்ளது. இதில் உள்ள பேட்டரியை ரீ சார்ஜ் செய்து கொள்ளலாம். அறிவியல் முறைப்படி இதன் பிரஷ், கைப்பிடி ஆகியன உரிய இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன.

இது வழக்கமான பிரஷை விட, 6 மடங்கு சிறந்தது என்கிறார்கள். இதில் உள்ள பிரஷ் குச்சிகள் அனைத்தும் ஒரு நிமிடத்திற்கு சுமார் 30 ஆயிரம் முறை முன்னும் பின்னும் நகர்ந்து பற்களை சுத்தப்படுத்துகிறது. இது வெள்ளை மற்றும் இளம் ஊதா நிறத்தைக் கொண்டதாக வந்துள்ளது. இதன் எடை 363 கிராம் ஆகும்.

5 வகையான மாடல்களில் இந்த எலக்ட்ரிக் டூத் பிரஷ் கிடைக்கிறது. அதிகபட்சம் ரூ. 11 ஆயிரம் முதல் குறைந்த பட்சம் ரூ. 5 ஆயிரம் வரையில் இவை விற்கப்படுகிறது. 

Next Story