வானவில் : கேனன் வயர்லெஸ் பிரிண்டர்


வானவில் :  கேனன் வயர்லெஸ் பிரிண்டர்
x
தினத்தந்தி 12 Sept 2018 12:48 PM IST (Updated: 12 Sept 2018 12:48 PM IST)
t-max-icont-min-icon

இப்போது வை-பை அதாவது கம்பியில்லா தொடர்பு இணைப்பு மூலம் செயல்படும் கருவிகள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது.

 இதனால் பெரும்பாலான தயாரிப்புகள் அனைத்துமே வயர்லெஸ் முறையில் இயங்கத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் கேனன் நிறுவனம், வயர்லெஸ் பிரிண்டரை அறிமுகம் செய்திருக்கிறது. இதில் ஸ்கேன் செய்யலாம், பிரிண்ட் எடுக்கலாம். கலர் இன்க்ஜெட் முறையில் பிரிண்ட் ஆகும். கேனன் செல்பி செயலி மூலமும் இதை செயல்படுத்தலாம்.

ஒரு நிமிடத்திற்கு 8 பக்கங்களை பிரிண்ட் எடுக்கும் அளவிற்கு வேகமாக செயல்படக்கூடியது. கலர் பக்கங்களாக இருந்தால் ஒரு நிமிடத்திற்கு 5 பக்கங்களை பிரிண்ட் எடுக்கலாம். இது வீடு மற்றும் சிறிய அலுவலகங்களுக்கு மிகவும் ஏற்றது. ரூ. 15,495 விலையிலான இந்த பிரிண்டர் இப்போது 15 சதவீத தள்ளுபடி விலையில் ரூ. 13,199 விலைக்கு அமேசான் ஆன்லைனில் கிடைக்கிறது. 

Next Story