வானவில் : மேக்ஸ்பூஸ்ட் கார் சார்ஜர்
இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியாததாகி விட்டது.
எவ்வளவுதான் அதி நவீன ஸ்மார்ட்போனாக இருந்தாலும், பேட்டரி சார்ஜ் தீர்ந்துவிட்டால் அது இருந்தும் இல்லாததற்குத்தான் சமம்.
கார் பயணத்தின்போதே ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய உதவும் சார்ஜர்தான் மேக்ஸ்பூஸ்ட். சந்தைக்கு வந்துள்ள அனைத்து விதமான நவீன ஸ்மார்ட்போன்களுக்கும் இது ஏற்றது. கிரே மற்றும் வெள்ளை நிறங்களில் இது வந்துள்ளது. இதில் ஆப்பிள்-ஐ போன் 6, எஸ் பிளஸ் 6, சாம்சங் கேலக்ஸி எஸ் 7 எட்ஜ், ஹெச்.டி.சி., நெக்சஸ், ஐ-பேட், டேப்லெட் உள்ளிட்ட அனைத்து மாடல் போன்களையும் சார்ஜ் செய்ய முடியும்.
இதுவரை அமெரிக்காவில் மட்டுமே விற்பனை செய்யப்பட்ட மேக்ஸ்பூஸ்ட் சார்ஜர், தற்போது அமேசான் மூலமும் விற்பனைக்கு வந்திருக்கிறது. இறக்குமதி வரி, சுங்கவரி உள்பட அனைத்தையும் சேர்த்து இதன் விலை ரூ. 3,799. இப்போது 40 சதவீத தள்ளுபடியில் ரூ. 2,279-க்கு அமேசான் ஆன்லைனில் கிடைக்கிறது.
எம்.பி.3. பிளேயர், டிஜிட்டல் கேமரா உள்ளிட்டவற்றையும் இதில் சார்ஜ் செய்து கொள்ள முடியும். தெர்மோ பிளாஸ்டிக் பாலியுரித்தேன் (டி.பி.யு.) மேல் பூச்சு இருப்பதால் மிகவும் பாதுகாப்பானது. இதில் உள்ள வயர் இணைப்புகள் மிகச் சிறப்பாக இருப்பதால் ஷார்ட் சர்கியூட் ஆக வாய்ப்பில்லை. இதனால் உபகரணங்கள் பாதுகாக்கப்படும்.
அதீத வெப்பம், அதிகம் மின் கடத்துவது, அளவை விட அதிகம் சார்ஜ் செய்வது போன்ற பேச்சுக்கே இதில் இடம் இல்லை. ஸ்மார்ட்போன் உள்ளிட்ட மின்னணு கருவியின் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் ஆகிவிட்டால் மின் சப்ளையை நிறுத்தி விடும்.

Related Tags :
Next Story