மாவட்ட செய்திகள்

வானவில் : ஸ்கல்கேண்டி வயர்லெஸ் புளூடூத் இயர் போன் + "||" + Vanavil : Schlagend Wireless Bluetooth phone

வானவில் : ஸ்கல்கேண்டி வயர்லெஸ் புளூடூத் இயர் போன்

வானவில் :  ஸ்கல்கேண்டி வயர்லெஸ் புளூடூத் இயர் போன்
செல்போன், ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவருக்கும் மிகவும் அவசியமானது ‘இயர்போன்’. இதை ஸ்மார்ட்போன், செல்போன் தயாரிக்கும் நிறுவனங்களே தயாரித்து அளிக்கின்றன.
ஸ்கல்கேண்டி என்ற நிறுவனம் விதவிதமான இயர்போன்களை தயாரித்து விற்கிறது. அதில் பூம்-ஹெட்செட்களை போன்று இருக்கும் ‘நாக்-அவுட் ராபின்’ வகை ஹெட்போன்கள் அதிகமாக விற்பனையாகின்றன.

இது புளூடூத் தொழில்நுட்பத்தில் இயங்கக்கூடியது. மேலும் நெகிழ்வு தன்மையோடு உருவாக்கப்பட்டிருப்பதால், இதை பாக்கெட்டில் மடக்கி எடுத்து செல்ல முடியும்.


இதில் அதிக திறனுள்ள புளூடூத் பொருத்தப்பட்டிருப்பதால் ஸ்மார்ட்போன் வெகு தொலைவில் இருந்தாலும், பாடல்களை கேட்டு ரசிக்க முடியும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 8 மணி நேரம் வரை தொடர்ந்து செயல்படும். இதில் பில்ட் இன் மைக் உள்ளது. இதனால் ஸ்மார்ட்போன் அழைப்புகளை சுலபமாக இணைத்து, பேச முடியும். மேலும் ரிமோட் மூலமாகவும் அழைப்புகளை ஏற்கலாம்.

இதில் பாடல்களை மாற்றிக்கொள்ளவும், ஒலி அளவை கூட்டி குறைக்கவும் தனித்தனி பட்டன்கள் உள்ளன. மிகச் சிறப்பான இசை கேட்கும் வகையில் இதன் இயர் பட்ஸ் இருப்பதால் விருப்பமான பாடலை கேட்டு மகிழலாம். இதன் விலை ரூ. 3,999. அமேசான் இணையதளத்தில் 20 சதவீத விலை தள்ளுபடியில் ரூ.3,180-க்கு இதை வாங்கலாம். 

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : வாட்ச்மேன் ரோபோ
பெரிய அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் எத்தனை வாட்ச்மேன்கள் இருந்தாலும் போதாது.
2. வானவில் : கேடு விளைவிக்காத பேட்டரி
வழக்கமாக பயன்படுத்தப்படும் லித்தியம் பேட்டரிகள் விஷத்தன்மை உள்ளதால் மண்ணிற்கு மிகவும் கேடு விளைவிக்க கூடியவை.
3. வானவில் : செடிகளை வளர்க்கும் நவீன பூந்தொட்டி
இது நவீன உலகம். அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்து துறைகளிலும் நமது வாழ்க்கை முறையை எளிதாக்குகின்றன.
4. வானவில் : பியூமாவின் நவீன ஷூ
விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பியூமா, நைக், அடிடாஸ் போன்ற நிறுவனங்களிடையே கடும் போட்டி நிலவுகிறது.
5. வானவில் : திங்க்வேர் ரியர் வியூ கேமரா
இது முழுமையான ஹெச்டி ரியர்வியூ கேமராவாகும்.