வானவில் : மொபைல் ஸ்டாண்ட்
மொபைல் போன் என்பது பேசும் கருவி மட்டுமல்ல. திரைப்படம் பார்க்க, வீடியோ நிகழ்ச்சிகளைப் பார்க்க, பாடல் கேட்க என அதன் பயன்பாடு விரிந்து கொண்டே செல்கிறது.
போன் பேசுகையில் நம் கைகளில் தவழும் மொபைல் போன்கள், படம் பார்க்கும்போது டேபிள், தரை பகுதிகளில் வைக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக படம் பார்க்கும்போது திரை நமக்கு தெரியும் விதமாக அதை வைப்பதற்கு போராடவேண்டி யிருக்கிறது. சிலர் மொபைல் போனுக்கு பின்னால் புத்தகங்களை அடுக்கி அதற்கு முட்டுக் கொடுத்து நிற்க வைக்கிறார்கள். வீடாக இருந்தால் இது சரி. ஆனால் அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் இவற்றைத் தேட முடியுமா.
அதுபோன்ற சமயங்களில் மட்டுமின்றி எப்போதுமே கைகொடுக்கிறது ‘மொபைல் ஸ்டாண்ட்’. கேப்ரிகோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஸ்டாண்ட்டை நீங்கள் உங்கள் போனில் ஒட்டிக் கொள்ளலாம். தேவையான போது இதை திருகினால் ஸ்டாண்ட் போல விரிந்து கொள்ளும். நீங்கள் படம், பாடல், வீடியோ காட்சிகளை பார்க்கலாம். பிறகு தேவையில்லாதபோது இதை அழுத்தினால் இது அமுங்கி விடும். அப்படியே பாக்கெட்டில் போட்டுக் கொண்டு விடலாம். இந்த ஸ்டாண்ட் இருப்பதால் இதை பாக்கெட்டில் வைப்பதில் சிரமம் இருக்காது.
தொடக்கத்தில் இதன் விலை ரூ. 599. ஆனால் இப்போது ரூ. 99-க்கு 83 சதவீத தள்ளுபடி விலையில், அமேசான் தளத்தில் கிடைக்கிறது. அமேசானில் வேறு பொருட்கள் வாங்காமல் இதை மட்டும் ஆர்டர் செய்தால் கூடுதலாக டெலிவரி கட்டணம் ரூ. 80 செலுத்த வேண்டியிருக்கும். எப்படியிருப்பினும் 599 விலையிலிருந்த ஸ்டாண்ட் ரூ. 179-க்கு வாங்குவது லாபகரமானதுதானே. இது அனைத்து நிறங்களிலும் கிடைக்கிறது.

Related Tags :
Next Story