மாவட்ட செய்திகள்

வானவில் : விரைவில் அறிமுகமாகிறது ‘பேட்டரி வெஸ்பா’ + "||" + Vanavil : Soon introduces 'Battery Vespa'

வானவில் : விரைவில் அறிமுகமாகிறது ‘பேட்டரி வெஸ்பா’

வானவில் : விரைவில் அறிமுகமாகிறது ‘பேட்டரி வெஸ்பா’
பியாஜியோ நிறுவனம் ஆட்டோ மற்றும் ஸ்கூட்டர்களை தயாரித்து வருகிறது. தமிழகத்தில் ஓடும் பெரும்பாலான ‘ஷேர் ஆட்டோ’க்கள் பியாஜியோ நிறுவன தயாரிப்புகள் தான்.
இந்நிறுவனத்தின் மற்றொரு புகழ்பெற்ற தயாரிப்பு, வெஸ்பா ஸ்கூட்டர்கள். இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் வெஸ்பா தயாரிப்புகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் எதிர்கால மாற்றங்களை கருத்தில் கொண்டு, பேட்டரியில் இயங்கும் வெஸ்பா ஸ்கூட்டர்கள் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.


2016-ம் ஆண்டு நடைபெற்ற இ.ஐ.சி.எம்.ஏ. கண்காட்சியிலும், இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லியில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியிலும் பேட்டரி வெஸ்பா ஸ்கூட்டர் இடம்பெற்றிருந்தது. அப்போது இந்த ஸ்கூட்டரின் செயல்பாடுகள் தொடர்பாக கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் சில மாற்றங்கள் செய்து இந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வர உள்ளனர்.

முதலில் ஐரோப்பிய நாடுகளிலும், அதைத்தொடர்ந்து அமெரிக்காவிலும் அறிமுகப்படுத்திய பிறகு இந்தியாவில் பேட்டரி வெஸ்பா ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.

‘எலெக்ட்ரிகா’ என்ற பெயரில் அறிமுகமாக உள்ள இந்த ஸ்கூட்டரின் விலை ரூ. 85 ஆயிரம் முதல் ரூ. 90 ஆயிரம் வரை இருக்கும்.

இதில் 4 கிலோவாட் (5.4 பி.எஸ்.) மோட்டார் உள்ளது. ‘எகோ’ மற்றும் ‘பவர்’ என்ற இரண்டு நிலைகள் உள்ளன. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கி.மீ. தூரம் ஓடும். முழுவதுமாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் போதுமானதாகும். மேலும் இதில் தொடு திரை வசதியும் உண்டு.

‘எலெக்ட்ரிகா’ ஸ்கூட்டர் ஒகினோவா பிரைஸ் மற்றும் ஏதெர் 450 ஆகிய பேட்டரி ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வானவில் : இனி வலிக்கும் ஊசி தேவையில்லை
சிறியவர்கள் மட்டுமின்றி பெரியவர்களுக்கும் ஊசி என்றால் மனதிற்குள் ஒரு பயமிருக்கும். எம்.ஐ.டி. விஞ்ஞானிகளும், ஜப்பானை சேர்ந்த ஒரு மருத்துவக் குழுவும் இணைந்து ப்ரைம் என்னும் ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது.
2. வானவில் : ஹெச்.பி.யின் பிரீமியம் லேப்டாப்
ஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் தனது பிரீமியம் மாடல் லேப்டாப்பை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
3. வானவில் : பூச்சிக்கடியிலிருந்து காப்பாற்றும் சாதனம்
கொசுக்கள் மற்றும் பூச்சிகள் கடித்தால் அந்த இடத்தில் அரிப்பும் தடிப்பும் ஏற்பட்டு பாடாய்ப்படுத்தும். அதுவும் இரவு நேரங்களில் கொசுக்கடியால் தூக்கமே போய்விடும்.
4. வானவில் : சாம்சங்கின் 2 புதிய ஸ்மார்ட்போன்கள்
சாம்சங் நிறுவனம் சீனாவின் ஜியோமி, ஓப்போ போன்றவற்றின் போட்டிகளை சமாளிக்க குறைந்த விலை ஸ்மார்ட் போன்களை தயாரித்து இந்திய சந்தையில் தனது முன்னிலையை தக்க வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது.
5. வானவில் : ஸ்விப்ட் பாயின்ட் ஜிடி மவுஸ்
இப்போது கம்ப்யூட்டர் இல்லாத வீடுகளே இல்லை என்றாகிவிட்டது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரையிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு மிகவும் அவசியமாகி விட்டது.

ஆசிரியரின் தேர்வுகள்...