வானவில் : ‘ஹூண்டாய்’ நிறுவனத்தின் புதிய தயாரிப்புகள்
மக்களின் பயன்பாட்டுக்கு ஏற்ப கார்களை வகைப்படுத்துகிறார்கள். அவற்றில் ஒன்று தான் ‘யுடிலிடி வெகிக்கிள்’. சுருக்கமாக இதை ‘யு.வி. கார்கள்’ என்கிறார்கள்.
தேவை அதிகரிப்பு
இந்தியாவில் ‘யு.வி.’ ரக கார்களுக்கான தேவை ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த ரகக் கார்களின் விற்பனை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. அதாவது, ஆண்டிற்கு சராசரியாக 9.2 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன.
இதற்கு ஈடு கொடுக்கும் வகையில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ‘யுடிலிடி’ வாகனங்களை தயாரிக்க முடிவு செய்துள்ளன. அந்த வகையில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50 புதிய ரக யுடிலிடி வாகனங்கள் சந்தையை ஆக்கிரமிக்கும் என்று தெரிகிறது.
மேலும் அடுத்த 4 ஆண்டுகளில் இத்தகைய வாகனங்கள் 15 லட்சம் அளவிற்கு விற்பனையாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் 6 மாடல்கள்
இதைக் கருத்தில் கொண்டு இத்தகைய கார்களைத் தயாரிக்க ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக, 6 மாடல்களில் இத்தகைய யு.வி. ரகக்கார்களைத் தயாரிக்க உள்ளனர். ரூ.5 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை அனைத்து விலை பிரிவிலும் யு.வி. கார்களைத் தயாரிக்க உள்ளது ஹூண்டாய் நிறுவனம்.
அடுத்த 5 ஆண்டுகளில் விற்பனையாகும் 13 கார்களில் 8 கார்கள் யு.வி. மாடல்களாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டே அந்த இடத்தில் தங்களது தயாரிப்புகளும் இடம்பெற வேண்டும் என்பதில் ஹூண்டாய் தீவிரமாக உள்ளது.
‘மைக்ரோ எஸ்.யு.வி.’ கார்கள்
இந்நிறுவனத்தின் கிரெடா மாடல் கார் பெருமளவு வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் வாடிக்கையாளர் வட்டம் 4 லட்சத்தைத் தாண்டும் போது இதைவிட மேம்பட்ட ரகத்தை மக்கள் எதிர்பார்ப்பார்கள்.
எனவே அதற்கு ஈடு கொடுக்கும் வகையில் புதிய மாடல்களைத் தயாரிக்க வேண்டிய சூழல் உள்ளது. இதுதவிர, ‘மைக்ரோ எஸ்.யு.வி.’ எனப்படும் புதிய மாடலையும் இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. அடுத்த ஆண்டு வெளிவரும் இந்த மாடல், மேம்பட்ட ரகத்தை நாடுவோருக்கு தீர்வாக இது நிச்சயம் இருக்கும் என்று ஹூண்டாய் கருதுகிறது.
ஹூண்டாய் நிறுவனத்தின் இந்த புதிய மாடல் கார்கள், போர்டு எகோ ஸ்போர்ட் மற்றும் மாருதியின் விடாரா பிர்ஸா ஆகியவற்றுக்கு இணையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்நிறுவனம் தயாரிக்கும் ‘ஐ-20 ஆக் டிவ்’ மற்றும் கிரெடாவின் மேம்பட்ட மாடலாக இது நிச்சயம் இருக்கும்.
சவால்
கிரெடாவில் 7 பேர் பயணிக்கும் வகையிலான புதிய மாடலையும் உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த மாடல் கார் 2020 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் வெளியிடப்படும்.
இதேபோல 5 பேர் பயணிக்கும் புதிய தலைமுறை டக்சானும் வெளியாக உள்ளது. இது ஜீப் கம்பாஸ் மற்றும் டொயோடா பார்ச்சூனருக்கு சவாலாக இருக்கும்.
இதேபோல மஹிந்திராவின் கே.யு.விக்குப் போட்டியாக ஒரு மைக்ரோ எஸ்.யு.வி. மாடலையும் தயாரிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
டக்சன் மற்றும் சான்டா எப்.இ. ஆகிய மாடல் கார்களின் உதிரிபாகங்கள், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு இந்தியாவில் ஒருங்கிணைக்கப்படுகின்றன. இத்தகைய கார்களை இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டமும், ஹூண்டாயிடம் இருக்கிறதாம். இதன் மூலம் ஜீப் கம்பாஸ், டொயோடா பார்ச்சூனருக்கு போட்டியாக இருக்க முடியும் என்று நிறுவனம் நம்புகிறது.
மேற்கண்ட தகவல்களை ஹூண்டாய் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஒய்.கே.கூ தெரிவித்துள்ளார்.
பேட்டரி கார்
அடுத்த ஆண்டில் பேட்டரியில் இயங்கும் காரை அசெம்பிள் செய்து விற்கவும் ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
கோனா’ என்ற பெயரிலான இந்தக் கார் கொரியாவிலிருந்து உதிரி பாகங்களாக இறக்குமதி செய்யப்பட்டு இங்கு காராக ஒருங்கிணைக்கப்பட்டு விற்கப்படும்.
‘யுடிலிடி’ கார்கள் என்றால் என்ன?
ஒரு குறிப்பிட்ட தேவைக்காக உருவாக்கப்படும் வாகனங்களையே ‘யுடிலிடி வெகிக்கிள்’ என்கிறார்கள்.
உதாரணத்திற்கு 8 பேர் பயணிக்கக்கூடிய வேன் வகையிலான வண்டிகளை பந்தயக்கார் வடிவத்தில் தயாரிப்பதை ‘ஸ்போர்ட்ஸ் யுடிலிடி வெகிக்கிள்’ என்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால் அது எஸ்.யு.வி.வகை கார்.
அதேசமயம் வேன் வகை கார்களை குடும்ப பாங்காக, தயாரித்து விற்பதை எம்.யு.வி. என்கிறார்கள். அதாவது ‘மல்டி யுடிலிடி வெகிக்கிள்’. இதை குடும்பத்தினர் பயணம் செய்யும் வாகனமாகவும் பயன்படுத்தலாம். அதேசமயம், வாடகை காராகவும் பயன்படுத்தலாம். அதனால்தான் இதனை ‘மல்டி யுடிலிடி வெகிக்கிள்’ என்கிறர்கள்.
இப்படி ஒவ்வொரு தேவைகளுக்காக தயாரிக்கப்படும் கார்கள் அனைத்தும், ‘யுடிலிடி வெகிக்கிள்’ பட்டியலில் வருகின்றன.

Related Tags :
Next Story