வானவில் : பிரபலமானவர்களின் வாகனம்


வானவில் : பிரபலமானவர்களின் வாகனம்
x
தினத்தந்தி 12 Sept 2018 3:01 PM IST (Updated: 12 Sept 2018 3:01 PM IST)
t-max-icont-min-icon

சச்சின் தெண்டுல்கருக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உண்டு. ஆனால் அவர் கார்களின் ரசிகர்.

சச்சின் தெண்டுல்கரின் வீட்டில் பல மாடல் கார்கள் உள்ளன. இருந்தாலும் அவர் முதன் முதலில் வாங்கிய மாருதி 800 சிவப்பு நிறக் காரையே அதிகம் விரும்புகிறார்.

அவரது காரேஜில் ஆடி, பி.எம்.டபிள்யூ. என பிரபல கார்கள் நின்றாலும், சச்சினின் பார்வை மாருதி 800 காரை நோக்கியே பதிகிறது.

1983-ம் ஆண்டு ஒரு மாருதி காரை வாங்க அவர் நினைத்தார். ஆனால் அப்போது அவரிடம் போதிய பணம் இல்லை. அதனால் பணத்தை சிறுகசிறுக சேர்த்து வாங்கிய முதல் கார் என்பதால், மாருதி 800-க்கு சச்சினி காரேஜில் தனி மரியாதை.

சச்சின் தற்போது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக இருந்தாலும், முதலில் வாங்கிய சிவப்பு நிற மாருதி காரையே பொக்கிஷமாக பாதுகாக்கிறார். 

Next Story