மாவட்ட செய்திகள்

வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை + "||" + The suicide of the young man drunk in poison

வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை

வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை
சேத்தியாத்தோப்பு அருகே வி‌ஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வத்தராயன்தெத்து கிராம்ததை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகன் முரளி(வயது 35), மகள் புனிதா(33). பால்ராஜ் தனக்கு சொந்தமான 19 ஏக்கர் நிலத்தை, இருவருக்கும் தலா 6 ஏக்கர் பிரித்து கொடுத்துள்ளார். மீதமுள்ள நிலத்தை தனது பெயரில் பால்ராஜ் வைத்திருந்தார். 

இந்தநிலையில் அந்த நிலத்தையும் தனது பெயரில் எழுதி தரும்படி முரளி தனது தந்தையை வற்புறுத்தி வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்ராஜ், சாக்காங்குடியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றிருந்தார்.

தனது பெயருக்கு சொத்து எழுதி தராததால் மனமுடைந்த முரளி, சம்பவத்தன்று வீட்டில் வி‌ஷத்தை குடித்து விட்டார். பின்னர் சாக்காங்குடியில் உள்ள தங்கை வீட்டுக்கு சென்று தனது பெயருக்கு சொத்து எழுதி தரும்படி கேட்டார். இதற்கிடையே அவர் வீட்டிலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் முரளியை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி முரளி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் டிரைவர் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
2. லாஸ்பேட்டையில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை கடன் பிரச்சினையால் பரிதாப முடிவு
லாஸ்பேட்டையில் கடன் பிரச்சினையால் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
3. காங்கேயம் அருகே பரிதாப சம்பவம்; கவனிக்க யாரும் இல்லாததால் தம்பதி தீக்குளித்து தற்கொலை
காங்கேயம் அருகே கவனிக்க யாரும் இல்லாததால் கணவன்-மனைவி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டனர். இதில் படுகாயத்துடன் தப்பிய அவர்களது பேரனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
4. ‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற வாலிபர்
‘‘ஊருக்கு ரோடு சரியில்லை’’ என்று கூறி, குன்னத்தூரில் செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை தீயணைப்பு வீரர் ஒருவர் பாதுகாப்பாக கீழே அழைத்துவந்தார்.
5. கணவரின் கடன் தொல்லையால் தூக்கு போட்டு பெண் தற்கொலை
கணவரின் கடன் தொல்லையால் வேதனை அடைந்த பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.