மாவட்ட செய்திகள்

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழுதான கப்பல்களை உடைக்க அனுமதி கோரி வழக்கு விசாரணை தள்ளிவைப்பு + "||" + The case has been postponed for claiming permission to break ships

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழுதான கப்பல்களை உடைக்க அனுமதி கோரி வழக்கு விசாரணை தள்ளிவைப்பு

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழுதான கப்பல்களை உடைக்க அனுமதி கோரி வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த மீனம் பி‌ஷரிஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ரைசிங் ஸ்டார் மற்றும் ரைசிங் சன் என்ற 2 கப்பல்கள் கடந்த 2010–ம் ஆண்டு பழுதடைந்தது.
சென்னை, 

சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த மீனம் பி‌ஷரிஸ் லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான ரைசிங் ஸ்டார் மற்றும் ரைசிங் சன் என்ற 2 கப்பல்கள் கடந்த 2010–ம் ஆண்டு பழுதடைந்தது. கடந்த 8 ஆண்டுகளாக அந்த கப்பல்கள் காசிமேடு மீன்பிடி துறைமுகப்பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல்களை உடைக்க அனுமதி கேட்டு சென்னை துறைமுக பொறுப்புக்கழக நிர்வாகத்திடம் கப்பல் நிறுவனம் மனு அளித்தது. ஆனால், சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு கப்பல்களை பழுது பார்க்க அனுமதிக்க முடியுமே தவிர, உடைப்பதற்கு அனுமதி வழங்க முடியாது என்று சென்னை துறைமுக பொறுப்புக்கழகம் கூறி உள்ளது.

இதைத்தொடர்ந்து, இந்த கப்பல்களை உடைக்க அனுமதிக்கக் கோரி கப்பல் நிறுவனத்தின் மேலாளர் ரவி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், பழுதான 2 கப்பல்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்து அவற்றை உடைக்க அனுமதிப்பது தொடர்பாக ஏன் நிபுணர் குழுவை அமைக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார். பின்னர், விசாரணையை நாளைக்கு (வெள்ளிக்கிழமை) தள்ளிவைத்தார்.


ஆசிரியரின் தேர்வுகள்...