மாவட்ட செய்திகள்

சாலையோரம் தூங்கி கொண்டிருந்த பெண், கார் மோதி பலி + "||" + Female car crash victim

சாலையோரம் தூங்கி கொண்டிருந்த பெண், கார் மோதி பலி

சாலையோரம் தூங்கி கொண்டிருந்த பெண், கார் மோதி பலி
திருவள்ளூர் அருகே சாலையோரம் தூங்கி கொண்டிருந்த பெண், கார் மோதி பலியானார்.
திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் சூரகாபுரத்தை சேர்ந்தவர் ஆதியம்மாள் (வயது 25). இவர் கடந்த 5–ந் தேதி தன்னுடைய வீட்டின் வெளியே சாலையோரமாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவரது காலில் ஏறி இறங்கியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரான சூரகாபுரத்தை சேர்ந்த பிரேம் குமார் (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.