“ஆன்லைன்” லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது


“ஆன்லைன்” லாட்டரி விற்பனை செய்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 13 Sept 2018 3:15 AM IST (Updated: 13 Sept 2018 12:26 AM IST)
t-max-icont-min-icon

கூத்தாநல்லூர் அருகே “ஆன்லைன்” லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூத்தாநல்லூர், 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பொதக்குடி, வாழாச்சேரி உள்ளிட்ட இடங்களில் “ஆன்லைனில்” பதிவு செய்யப்படும் லாட்டரி விற்பனை நடப்பதாக கூத்தாநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அப்பகுதிகளில் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட “ஆன்லைன்” லாட்டரி விற்பனையில் பழவனக்குடி சிவன்கோவில் தெருவை சேர்ந்த ராஜா (வயது42), அத்திக்கடை உமர்ஒலி தெருவை சேர்ந்த முகமதுஅலீம் (41), வாழாச்சேரி சிவன் கோவில் தெருவை சேர்ந்த விஜயகுமார்(37), அத்திக்கடை இக்பால் தெருவை சேர்ந்த முகமதுபைசல் (29) ஆகிய 4 பேர் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தனர். 

Next Story