மனைவியுடன் தகராறு: கால்டாக்சி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


மனைவியுடன் தகராறு: கால்டாக்சி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 12 Sep 2018 9:45 PM GMT (Updated: 12 Sep 2018 7:31 PM GMT)

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த கால் டாக்சி டிரைவர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த புழல் லட்சுமிபுரம் திலகர் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை(வயது 27). கால் டாக்சி டிரைவர். இவருடைய மனைவி சித்ரா(22). இவர்களுக்கு 4 வயதில் தினேஷ் கார்த்திக் என்ற மகன் உள்ளார். 

கணவன்–மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் சித்ரா, அடிக்கடி தனது கணவருடன் கோபித்துக்கொண்டு அதே லட்சுமிபுரம் நேரு தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார். 

தூக்குப்போட்டு தற்கொலை

கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் தாய் வீட்டில் இருந்து மீண்டும் கணவர் வீட்டுக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மீண்டும் கணவன்–மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மனம் உடைந்த ஏழுமலை, தனது வீட்டில் மின்விசிறியில் மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த புழல் போலீசார், தற்கொலை செய்து கொண்ட ஏழுமலை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி புழல் போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.

Next Story