பூண்டி ஏரி மதகுகள் சீரமைப்பு பணி தொடக்கம்
பூண்டி ஏரி மதகுகள் சீரமைப்பு பணி தொடங்கப்பட்டது.
ஊத்துக்கோட்டை,
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. 35 அடி உயரம் கொண்ட இந்த ஏரியில் 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியில் 16 மதகுகள் அமைக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 40 அடி அகலம், 15 அடி அடி நீளம் கொண்டது. இந்த 16 மதகுகள் மூலமாக அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 20 லட்சம் கனஅடி தண்ணீரை வெளியேற்ற முடியும்.
கோடை வெயில் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் கண்டலேறு அணையில் இருந்து நீர் வரத்து இல்லாததால் தற்போது பூண்டி ஏரி வறண்டு காணப்படுகிறது.
சீரமைப்பு பணிகள் தொடக்கம்
இந்த நிலையில் பல ஆண்டுகளாக சீரமைக்கபடாத காரணத்தால் சில மதகுகளில் தண்ணீர் கசிவு ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு அணைத்து மதகுகளையும் சீரமைக்க தமிழக அரசு ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கியது. இந்த நிதியை கொண்டு மதகுகள் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்துக்குள் பணி முடிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story