தொழில் நல்லுறவு பரிசு திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் கடலூர் அதிகாரி தகவல்
தொழில் நல்லுறவு பரிசு திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி தெரிவித்து உள்ளார்.
கடலூர்,
கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவும் நிலவுவதை, ஊக்குவிக்கும் பொருட்டு, தமிழக அரசு, தொழில் நல்லுறவு பரிசு திட்டத்தை அறிவித்து உள்ளது.இத்திட்டத்தின் கீழ், நல்ல தொழில் உறவினை பேணி பாதுகாக்கும் வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு 2017-ம் ஆண்டுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள ஒரு முத்தரப்புக்குழு தேர்ந்து எடுக்கும்.
விண்ணப்பிக்கலாம்
இவ்விருதுக்குரிய விண்ணப்பங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம், அல்லது மாவட்டத்தில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர்(சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணைஆணையர் அலுவலகங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குனர் அலுவலகங்கள், மற்றும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் விண்ணப்ப கட்டணம் செலுத்தியதற்கான விவரத்தையும் இணைத்து சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்துக்கு அடுத்த மாதம்(அக்டோபர்) 10-ந்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story