தகானு முன்னாள் நகராட்சி தலைவர் ரெயிலில் அடிபட்டு சாவு தற்கொலையா? போலீஸ் விசாரணை

தகானு முன்னாள் நகராட்சி தலைவர் ரெயிலில் அடிபட்டு சாவு தற்கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 12 Sep 2018 9:30 PM GMT (Updated: 12 Sep 2018 8:44 PM GMT)

தகானு முன்னாள் நகராட்சி தலைவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

வசாய், 

தகானு முன்னாள் நகராட்சி தலைவர் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

முன்னாள் நகராட்சி தலைவர்

பால்கர் மாவட்டம் தகானு பூர்வ நகரை சேர்ந்தவர் ஈஸ்வர் தோதி (வயது55). இவர் தகானு முன்னாள் நகராட்சி தலைவர் ஆவார். சிவசேனா கட்சியை சேர்ந்த இவர், நேற்று முன்தினம் தகானுரோடு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது, அந்த வழியாக வந்த மின்சார ரெயில் அவர் மீது மோதியது. இதில், உடல் துண்டாகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீஸ் விசாரணை

இதுபற்றி தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த சிவசேனா தொண்டர்கள் மருத்துவமனை முன் அதிகளவில் குவிந்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

ஈஸ்வர் தோதி தற்கொலை செய்து கொண்டாரா? என்ற சந்தேகமும் போலீசுக்கு எழுந்து உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Next Story