திருப்பூரில் 15-ந்தேதி மின்தடை


திருப்பூரில் 15-ந்தேதி மின்தடை
x
தினத்தந்தி 13 Sept 2018 3:45 AM IST (Updated: 13 Sept 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் துணை மின்நிலையத்தில் 15-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதாக திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் குமார் நகர் துணை மின்நிலையத்தில் வருகிற 15-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட ராமமூர்த்திநகர், பி.என்.ரோடு, ராமையா காலனி, பாளையக்காடு, கருமாரம்பாளையம், சேர்மன் கந்தசாமி நகர், நேதாஜி நகர், ரங்கநாதபுரம், ஈ.ஆர்.பி.நகர், கொங்கு நகர், அப்பாச்சிநகர், கோல்டன் நகர், பவானி நகர், திருநீலகண்டபுரம், எஸ்.வி.காலனி, பண்டிட்நகர், கொங்கு மெயின் ரோடு, வ.உ.சி.நகர், டி.எஸ்.ஆர்.லே-அவுட், முத்துநகர், பிரிட்ஜ்வே காலனி, குத்தூர்ஸ்புரம், என்.ஆர்.கே.புரம், வெங்கடேசபுரம், குமரானந்தபுரம், டீச்சர்ஸ் காலனி, 60 அடி ரோடு, இட்டேரி சாலை, அருள்ஜோதிபுரம். நெசவாளர் காலனி, திருமலைநகர், சந்திரா காலனி, முருகானந்தபுரம், எம்.எஸ்.நகர், புதிய பஸ்நிலையம், லட்சுமிநகர் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை ஏற்படும்.

இந்த தகவலை திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

Next Story