மாவட்ட செய்திகள்

திருச்சி நகர பகுதியில் மின் தடை- கருவிகள் பழுது புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் + "||" + Electricity barrier in Tiruchirapattinam area - Cell phone numbers to report repairing complaints

திருச்சி நகர பகுதியில் மின் தடை- கருவிகள் பழுது புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள்

திருச்சி நகர பகுதியில் மின் தடை- கருவிகள் பழுது புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள்
திருச்சி நகர பகுதியில் மின் தடை மற்றும் கருவிகள் பழுது போன்ற புகார்களை தெரிவிக்க செல்போன் எண்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
திருச்சி,

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் திருச்சி நகர கோட்ட செயற்பொறியாளர் ராஜேந்திர விஜய் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மழைக்காலங்களில் இடி மின்னலின்போது தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி, கணினி போன்ற மின் சாதனங்களை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடவேண்டாம். மின் கம்பத்திலோ அல்லது இழுவை கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மழை நேரங்களில் மின் மாற்றிகள், மின் கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், இழுவை கம்பிகள் ஆகியவற்றின் அருகில் செல்லவேண்டாம்.

திருச்சி நகரியம் கோட்டத்தை சேர்ந்த பொதுமக்கள், மின் பயனீட்டாளர்கள் தங்கள் பகுதிகளில் ஏற்படும் மின்தடை மற்றும் மின் வாரிய சாதனங்களில் ஏற்படும் பழுது போன்ற புகார்களை தங்கள் பகுதிக்கு உட்பட்ட பிரிவு அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்களிடம் தெரிவிக்கலாம். பிரிவு அதிகாரிகள் தென்னூர் 94458 53466, பாலக்கரை 94458 53475, தில்லைநகர் 94458 53467, காந்திமார்க்கெட் 94458 53476, உறையூர் 94458 53468, செந்தண்ணீர்புரம்- 94458 53477, சீனிவாசநகர் 94458 53469, ஜங்ஷன் 94458 53478, மலைக்கோட்டை 94458 53472, பொன்னகர் 94458 53481, சிந்தாமணி 94458 53473, மகாலட்சுமி நகர் 94458 53482, மெயின்கார்டு கேட் 94458 53474 ஆகிய எண்களில் தெரிவிக்கலாம்.

உதவி செயற்பொறியாளர்களை தென்னூர் 94458 53461, கண்டோன்மெண்ட் 94458 53462, பாலக்கரை 94458 53463, மலைக்கோட்டை 94458 53464 என்ற எண்களிலும் தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். துணை மின் நிலையங்களின் தொலைபேசி எண்கள் பெரிய மிளகுபாறை -2460539, தென்னூர் 2791499, இ.பி. ரோடு 2701919, கோர்ட்டு 2400647, மெயின்கார்டு கேட் 2914455, வரகனேரி 2202525 ஆகும்.

மேலும் மின் நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடை புகார்களை 1912 மற்றும் 1800 425 2912 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களிலும் 24 மணி நேரமும் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.