கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி
கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெறுகிறது.
ஜெயங்கொண்டம்,
தா.பழூர் அருகே சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு மற்றும் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. தா.பழூர் ஒன்றிய வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) செல்வகுமார் தலைமை தாங்கி பேசுகையில், இளைஞர்கள் தான் வருங்காலத்தில் விவசாயத்தை காப்பாற்றும் பொறுப்பில் உள்ளர்கள். இந்த பயிற்சியில் கூறப்படும் அனைத்து தொழில்நுட்பங்களையும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டு பயன்பெறுமாறு கூறினார். வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா வரவேற்றார். பயிற்சியின் விதிமுறைகள் பற்றி மனையியல் தொழில்நுட்ப வல்லுநர் சோபனா எடுத்து கூறினார்.அறிவியல் மைய மூத்த விஞ்ஞானி மற்றும் தலைவர் அழகுகண்ணன் பேசுகையில், படித்த கிராமப்புற இளைஞர்கள் தங்களது கிராமங்களை விட்டு வேலைக்காக வெளிநாடு மற்றும் வெளியூர் சென்று குறைந்தளவே சம்பாதித்து வருகின்றனர். எனவே இளைஞர்கள் தங்களிடம் உள்ள வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த இடுபொருட்களை கொண்டு தங்கள் கிராமங்களில் சுயதொழிலில் ஈடுபட வேண்டும். அதற்கான முழு உதவியும் செய்ய வேளாண் அறிவியல் மையம் உள்ளது. இளைஞர்கள் அனைவரும் மையத்தினை அணுகி பயன்பெற வேண்டும் என்று கூறினார். பயிற்சியில் அரியலூர் மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப வல்லுநர்கள் அசோக்குமார், கிருத்திகா, அறிவுச்செல்வி, திருமலைவாசன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story