தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வ.உ.சி. துறைமுகம் வழியாக குதிரைகள் ஏற்றுமதி


தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு வ.உ.சி. துறைமுகம் வழியாக குதிரைகள் ஏற்றுமதி
x
தினத்தந்தி 12 Sep 2018 10:00 PM GMT (Updated: 12 Sep 2018 9:44 PM GMT)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு குதிரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு குதிரைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

குதிரை ஏற்றுமதி

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சரக்குகள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி நேற்று சென்னையை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் இலங்கைக்கு 6 குதிரைகளை ஏற்றுமதி செய்தது. இதில் 2 குதிரைகள் சென்னையில் இருந்தும், 2 குதிரைகள் பெங்களூருவில் இருந்தும், 2 குதிரைகள் புனேயில் இருந்தும் தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் 6 குதிரைகளும் அதற்கென வடிவமைக்கப்பட்ட கன்டெய்னருக்குள் அடைக்கப்பட்டு இருந்தன.

பந்தயத்தில்...

பின்னர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கை கொழும்பு நகருக்கு ‘கேப்நெமோ‘ என்னும் கப்பல் மூலம் குதிரைகள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த குதிரைகள் இலங்கையில் பந்தயத்தில் பயன்படுத்துவதற்காக கொண்டு செல்வதாக கூறப்படுகிறது. கடல் கடந்து செல்லும் இந்திய குதிரைகளை துறைமுக ஊழியர்கள் ஆர்வமுடன் பார்த்தனர்.

Next Story