தூத்துக்குடி மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Sept 2018 3:28 AM IST (Updated: 13 Sept 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை, நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி மின்சார வாரிய ஊரக செயற்பொறியாளர் கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மின்தடை

விளாத்திகுளம், குளத்தூர், சூரங்குடி ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. எனவே இந்த துணை மின்நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் மந்திகுளம், செங்கல்படை, பிள்ளையார்நத்தம், கமலாபுரம், பேரிலோவன்பட்டி, விளாத்திகுளம், அயன்பொம்மையாபுரம், ராமச்சந்திராபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களிலும், கீழவைப்பார், வைப்பார், வேப்பலோடை, குளத்தூர், மார்த்தாண்டம்பட்டி, முள்ளூர் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களிலும், மேல்மாந்தை, ஈ.வேலாயுதபுரம், வேம்பார், பச்சையாபுரம், அரியநாயகிபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள ஊர்களிலும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

நாளை மறுநாள்

மஞ்சள் நீர்க்காயல், ஸ்ரீவைகுண்டம், நாகலாபுரம் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் கொற்கை, மாரமங்கலம், இடையற்காடு, இருவப்பபுரம், முக்காணி, பழையகாயல், கோவங்காடு, சாயர்புரம், நட்டாத்தி, பெருங்குளம், சிவகளை, கட்டாலங்குளம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையும், ஸ்ரீவைகுண்டம், கால்வாய், செய்துங்கநல்லூர், ஆதாளிக்குளம், துரைச்சாமிபுரம், நலன்குடி, வல்லகுளம், மல்லல்புதுக்குளம், காரசேரி, ராமானுஜம்புதூர், பத்மநாபமங்கலம், தோழப்பன்பண்ணை, ஆழ்வார்திருநகரி, சிவந்திப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையும் மின்தடை செய்யப்படுகிறது.

மேலும் நாகலாபுரம், குருவார்பட்டி, கோடங்கிபட்டி, வாதலக்கரை, காடல்குடி, துரைச்சாமிபுரம், பூதலாபுரம், சங்கரலிங்கபுரம், சல்லிசெட்டிப்பட்டி, சிவலார்பட்டி, வேடப்பட்டி, அச்சங்குளம், வடமலாபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story