தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும் காமராஜர் ஆதித்தனார் கழகம் தீர்மானம்

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும் காமராஜர் ஆதித்தனார் கழகம் தீர்மானம்
x
தினத்தந்தி 13 Sept 2018 3:45 AM IST (Updated: 13 Sept 2018 3:39 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும் என்று காமராஜர் ஆதித்தனார் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாசரேத், 

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும் என்று காமராஜர் ஆதித்தனார் கழக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நிர்வாகிகள் கூட்டம்

நாசரேத் அருகே உள்ள தைலாபுரத்தில் காமராஜர் ஆதித்தனார் கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் ஐஜினஸ் அந்தோணிகுமார் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ஸ்டீபன் ஜெயசிங் முன்னிலை வகித்தார். சுதாகர் வரவேற்று பேசினார். மாநில தலைவர் சிலம்பு சுரேஷ், மாநில பொதுச்செயலாளர் மின்னல் அந்தோணி ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன் விவரம் வருமாறு:-

தீர்மானங்கள்

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் கனவும், லட்சியமுமான சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். பனை தொழிலாளர்களுக்கு அரசு மானிய கடன் உதவி வழங்க வேண்டும். சென்னையில் உள்ள சாலைக்கு பா.ராமச்சந்திர ஆதித்தனார் பெயரை சூட்டிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. பா.ராமச்சந்திர ஆதித்தனார் பிறந்த தினத்தை வியாபாரிகள் தினமாக அறிவிக்க வேண்டும்.

திருச்செந்தூரில் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி, நிறைவு செய்ய வேண்டும். தூத்துக்குடி விமான நிலையத்துக்கு பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும். அவரது பிறந்த தினத்தை விளையாட்டு தினமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் லிங்கம், ஜென்கின்ஸ், லிங்கராஜ், சங்கர், சரவணன், ராம்குமார், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுரேஷ் நன்றி கூறினார்.

Next Story