குடியாத்தம் ஒன்றியத்தில் 82 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்


குடியாத்தம் ஒன்றியத்தில் 82 பயனாளிகளுக்கு பசுமை வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. வழங்கினார்
x
தினத்தந்தி 13 Sept 2018 4:01 AM IST (Updated: 13 Sept 2018 4:01 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் ஒன்றிய பகுதியில் தமிழக அரசின் பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 82 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

குடியாத்தம், 

பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கும் விழா குடியாத்தம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி தலைமை தாங்கினார். அ.தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் வி.ராமு, ஒன்றிய செயலாளர் டி.சிவா, கூட்டுறவு வங்கி தலைவர் வனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக ஜி.லோகநாதன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு 82 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கள்ளூர் பலராமன், மோகன், மூர்த்தி, தேவிகா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் செ.கு.வெங்கடேசன், கோபி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story