கடையத்தில் மணப்பெண் மாயமானதால் திருமணம் நின்றது போலீசார் தீவிர விசாரணை


கடையத்தில் மணப்பெண் மாயமானதால் திருமணம் நின்றது போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 13 Sept 2018 5:08 AM IST (Updated: 13 Sept 2018 5:08 AM IST)
t-max-icont-min-icon

மணப்பெண் திடீரென மாயமானதால் நேற்று கடையத்தில் நடைபெற இருந்த திருமணம் நின்றது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடையம், 

மணப்பெண் திடீரென மாயமானதால் நேற்று கடையத்தில் நடைபெற இருந்த திருமணம் நின்றது. இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண ஏற்பாடு

கடையம் சொசைட்டி தெருவை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஆய்க்குடி கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். அவருக்கும், கடையம் அருகே மயிலானூரை சேர்ந்த 27 வயதான கூலித் தொழிலாளி ஒருவருக்கும் திருமணம் செய்ய பெற்றோர் பேசி முடித்தனர்.

கடந்த மாதம் நிச்சயம் செய்யபட்டு நேற்று கடையத்தில் திருமணம் நடக்க இருந்தது. திருமண பத்திரிக்கை அச்சடிக்கப்பட்டு, உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கும் கொடுக்கப்பட்டது.

மணப்பெண் திடீர் மாயம்

இதற்காக நேற்று முன் தினம் இரவு மாப்பிள்ளை வீட்டார் சார்பில் மயிலானூரில் ஊர் சாப்பாடு நடைபெற்றது. திருமண ஏற்பாடுகளும் விமரிசையாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் இருந்த மணப்பெண் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. அவர் மாயமானார். பதறிப்போன குடும்பத்தினர் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனையடுத்து நேற்று நடக்க இருந்த திருமணம் நிறுத்தப்பட்டது. அவரை யாரும் கடத்தி சென்றிருக்கலாம் என இருவீட்டாரும் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது.

போலீசார் தீவிர விசாரணை

இதுகுறித்து இருவீட்டாரும் கடையம் போலீசாரிடம் புகார் செய்தனர். கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த இளம்பெண்ணை யாரும் கடத்தி சென்று விட்டார்களா? அல்லது வேறு காரணம் ஏதும் உள்ளதா? என தீவிரமாக தேடிவருகின்றனர்.

Next Story