மாவட்ட செய்திகள்

வேன்–பஸ் மோதல்; 11 பேர் காயம் + "||" + Van-bus clash; 11 people were injured

வேன்–பஸ் மோதல்; 11 பேர் காயம்

வேன்–பஸ் மோதல்; 11 பேர் காயம்
திட்டக்குடி அருகே வேன்–பஸ் மோதியதில் 11 பேர் காயமடைந்தனர்.

திட்டக்குடி,

அரியலூர் மாவட்டம் முள்ளுக்குறிச்சியை சேர்ந்தவர்கள், திட்டக்குடி பகுதியில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி அவர்கள், ஒரு வேனில் திட்டக்குடி நோக்கி புறப்பட்டனர். திட்டக்குடி அருகே கோழியூர் என்ற இடத்தில் வந்தபோது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் பின்புறத்தில் மோதியது. 

இந்த விபத்தில் வேனில் வந்த முள்ளுக்குறிச்சியை சேர்ந்த புகழேந்தி மனைவி செல்வி(வயது 36), தமிழரசி(47), அரசம்மாள்(69), கலியபெருமாள்(70), ஜெயா(39), தனலெட்சுமி(75), வெண்ணிலா(40), மல்லிகா(53), அஞ்சலை (50) உள்பட 11 பேர் காயமடைந்தனர். 

இவர்கள் அனைவரும் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதில் தமிழரசி, அஞ்சலை ஆகிய 2 பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இந்த விபத்து குறித்து திட்டக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


ஆசிரியரின் தேர்வுகள்...