திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா
திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
திருவள்ளூர்,
திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி விழாதிருவள்ளூர் கிழக்கு குளக்கரை தெருவில் உள்ள சக்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. விநாயகரை சிவன் தாங்கி நிற்பது போல் சிலை அமைத்து வழிபட்டனர். மணவாளநகர் ஜெய விநாயகர் கோவிலில் விநாயகர் ரதத்தில் வருவது போல் சிலை அமைக்கப்பட்டு ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
இதில் பா.ம.க. மாநில துணை செயலாளர் தினேஷ் குமார் மாவட்ட சட்ட பாதுகாப்பு செயலாளர் யோகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு சங்கமேஸ்வரர் கோவில் முன்பு விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலை வைக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, ஆர்.கே.பேட்டை, வங்கனூர் உள்பட பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
திருப்பாச்சூர், புதுமாவிலங்கை, பேரம்பாக்கம், மப்பேடு சுற்றுவட்டார பகுதிகளிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
காஞ்சீபுரம் மாவட்டம்காஞ்சீபுரம் மாவட்டம், இடைக்கழி நாடு பேரூராட்சி கடப்பாக்கம், விஜயநகரில் உள்ள வரசித்திவிநாயகர் கோவிலில் விநாயகர் சதூர்த்தி விழா கோவில் தர்மகர்த்தா பெருமாள் தலைமையில் நடைபெற்றது.
அச்சரப்பாக்கத்தை அடுத்த பள்ளிப்பேட்டை ஊராட்சி புதுப்பேட்டையில் உள்ள விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. வெங்கடேச புரத்திலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.