சென்னையில் வீடு வாங்க வந்தவரின் ரூ.23 லட்சத்துடன் கார் டிரைவர் தப்பி ஓட்டம்
சென்னையில் வீடு வாங்க வந்தவரின் ரூ.23 லட்சத்துடன் கார் டிரைவர் தப்பிச்சென்று விட்டார்.
மதுராந்தகம்,
சென்னையில் வீடு வாங்க வந்தவரின் ரூ.23 லட்சத்துடன் கார் டிரைவர் தப்பிச்சென்று விட்டார்.
வீடு வாங்க வந்தார்புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் புதுபட்டினத்தை சேர்ந்தவர் பாலகுரு (வயது 60). இவர் சென்னையில் வீடு வாங்குவதற்காக அதே பகுதியை சேர்ந்த டிரைவர் முகமது என்பவருடன் காரில் சென்னைக்கு சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
கிழக்கு கடற்கரை சாலை செய்யூரை அடுத்த முட்டுக்காடு என்ற இடத்தில் காரை நிறுத்திவிட்டு பாலகுருவும், முகமதுவும் ஓட்டலில் சாப்பிட சென்றனர்.
ரூ.23 லட்சத்துடன்...வெளியே சென்றுவிட்டு வருகிறேன் என்று கூறிவிட்டு முகமது வெளியே வந்தார். அதன் பின்னர் சாப்பிட்டு விட்டு பாலகுரு வெளியே வந்தார். அப்போது முகமது காருடன் தப்பிச்சென்றது தெரியவந்தது. காரில் பாலகுருவின் ரூ.23 லட்சம் இருந்தது. இது குறித்து பாலகுரு செய்யூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முகமது காரை கூவத்தூரில் விட்டுவிட்டு பணத்துடன் தப்பிச்சென்றது தெரியவந்தது.
இன்ஸ்பெக்டர் நாகலிங்கம் தலைமையிலான போலீசார் டிரைவர் முகமதுவை தேடி வருகின்றனர்.