மாவட்ட செய்திகள்

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு + "||" + The school student is drowning in the lake

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

காஞ்சீபுரம், 

ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏரியில் மூழ்கினார்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் பிரசாந்த் (வயது 12). அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7–ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் பிரசாந்த் அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய நண்பர்களுடன் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த தொடுகாடு ஓம் நகர் பகுதியில் விளையாட சென்றார்.

பின்னர் அவர்கள் அங்குள்ள பஞ்சமி தாங்கல் ஏரியில் குளித்தனர். அப்போது ஏரியின் ஆழமான பகுதிக்கு சென்ற பிரசாந்த் ஏரியில் மூழ்கினார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை காப்பாற்ற முடியவில்லை.

விசாரணை

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.தொடர்புடைய செய்திகள்

1. 2 குழந்தைகளை கொன்றுவிட்டு வி‌ஷம் குடித்த தந்தையும் சிகிச்சை பலனின்றி சாவு
2 குழந்தைகளை கொன்றுவிட்டு வி‌ஷம் குடித்த தந்தையும் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
2. அந்தியூர் அருகே வாகனம் மோதி பிளஸ்–1 மாணவர் பரிதாப சாவு
அந்தியூர் அருகே வாகனம் மோதி பிளஸ்–1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.
3. தமிழக–கர்நாடக எல்லையில் வயது முதிர்வால் பெண் யானை சாவு
தமிழக–கர்நாடக எல்லையில் வயது முதிர்வால் பெண் யானை இறந்தது.
4. திருஉத்தரகோசமங்கை அருகே பரிதாபம்: கபடி விளையாடிய போது மயங்கி விழுந்து வாலிபர் சாவு
திருஉத்தரகோசமங்கை அருகே வெண்குளம் கிராமத்தில் கபடி விளையாடியபோது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் மயங்கி விழுந்து பரிதாபமாக இறந்துபோனார்.
5. பூச்சி மருந்து குடித்து சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாப சாவு கடைக்கு தனியாக செல்ல வேண்டாம் என தாயார் கூறியதால் விபரீத முடிவு
பூச்சி மருந்தை குடித்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவி பரிதாபமாக இறந்தார்.