கழுத்தை அறுத்து பெண் கொலை; கணவர் தப்பி ஓட்டம்


கழுத்தை அறுத்து பெண் கொலை; கணவர் தப்பி ஓட்டம்
x
தினத்தந்தி 14 Sept 2018 3:00 AM IST (Updated: 14 Sept 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கணவர் தப்பி ஓடிவிட்டார்.

நயினார்கோவில், 

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் கிளியூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல் (வயது48). இவருடைய மனைவி லதா (42). இவர்கள் 2 பேரும் குடும்பத்தகராறு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனைவியின் நடத்தையில் குமரவேல் சந்தேகம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கிளியூர் அருகே வேலைக்கு சென்றுகொண்டு இருந்த லதாவை வழிமறித்து குமரவேல் தாக்கி கருவேல முட்புதருக்குள் இழுத்துச்சென்றுள்ளார். அங்கு அவரை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு குமரவேல் தப்பி ஓடிவிட்டாராம்.

இதற்கிடையில் வேலைக்கு சென்றவர் வீடு திரும்பாததால் லதாவின் உறவினர்கள் அவரை தேடிச்சென்றபோது அவர் கொலைசெய்யப்பட்டு கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நயினார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தப்பிஓடிய குமரவேலை தேடிவருகின்றனர். 

Next Story