மாவட்ட செய்திகள்

கோத்தகிரியில் ரூ.45 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணி மும்முரம் + "||" + The task of setting up a workshop at Rs. 45 lakh in Kotagiri

கோத்தகிரியில் ரூ.45 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணி மும்முரம்

கோத்தகிரியில் ரூ.45 லட்சம் செலவில் தார்சாலை அமைக்கும் பணி மும்முரம்
கோத்தகிரியில் ரூ.45 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
கோத்தகிரி, 

கோத்தகிரியில் இருந்து மிளிதேன், உல்லத்தட்டி, நெடுகுளா, காவிலோரை, குருக்குத்தி உள்ளிட்ட கிராம பகுதிகளுக்கு செல்லும் சாலையில் ராம்சந்த் சதுக்கம் பகுதி முதல் கிளப் ரோடு வரை உள்ள சாலை மிகவும் குறுகியதாக இருந்தது. இந்த சாலையோரத்தில் அதிக அளவு வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது.

இதுபோன்ற நேரங்களில் மாற்று சாலையாக மிஷண் காம்பவுண்ட் வழியாக கிளப்ரோடு செல்லும் விண்டிகேப் இணைப்பு சாலை பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே இந்த சாலையை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கோத்தகிரி பேரூராட்சி மூலம் ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்ட நிதி ரூ.45 லட்சம் செலவில் பழுதடைந்த சாலையை புதுப்பிக்கும் பணி தொடங்கப்பட்டது. தார் சாலை அமைக்கும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்த பணிகள் உதவி நிர்வாக என்ஜினீயர் சுப்ரமணி, உதவி என்ஜினீயர் மோகன்ராஜ், செயல் அலுவலர் குணசேகரன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. நீண்ட நாட்களுக்கு பின் பழுதடைந்த இந்த சாலை புதுப்பிக்கப்படுவதால் இப்பகுதி மக்களும் வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.